Connect with us
boomerang-movie

சுசி லீக்ஸ் போன்றது கிடையாது என் ட்வீட் ! தன்னிலை விளக்கம் அளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மனைவி நேஹா !

News | செய்திகள்

சுசி லீக்ஸ் போன்றது கிடையாது என் ட்வீட் ! தன்னிலை விளக்கம் அளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மனைவி நேஹா !

“சில நடிகைகள் திருமணமான ஆண்களைத்தான் குறி வைக்கிறார்கள்.” என்ற டீவீட்டை பதிவிட்டு சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நேஹா.

ஸ்டுடியோ கிறீன்

ஸ்டுடியோ கிறீன் உரிமையாளர் ஞானவேல்ராஜா. ஆரம்பத்தில் சூர்யா படங்களை மட்டும் தயாரித்த இவர், தற்பொழுது பல படங்களை தயாரித்து வருகின்றார். மிகவும் ட்ரெண்டியான படங்கள் தான் இவர்களின் பாணரில் வெளிவரும் என்று நம் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு நம்பிக்கை உள்ளது. இவரது மனைவி நேஹா, இவர் ஜில்லுனு ஒரு காதல், நான் மஹான் அல்ல , சிங்கம் 3 போன்ற படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ட்விட்டரில் நேஹா

நேஹா தனது டுவட்டர் கணக்கில் “சில நடிகைகள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். பொதுவாக சொல்லவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்தும். சில நடிகைகள் திருமணமான ஆண்களைத்தான் குறி வைக்கிறார்கள். படுக்கையை பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அவர்களை பற்றிய பட்டியலை வைத்திருக்கிறேன். விரைவில் அவர்களை வெளியேற்றுவேன்.”

neha gnanavel

இதை படித்தவர்கள், அவருடைய கணவருக்கே அப்படி நடந்ததா? என்று கேள்வி எழுப்பினர், சிலரோ சுசி லீக்ஸ் பார்ட் 2 என்று கிண்டல் செய்ய. தான்பதிவிட்ட டீவீட்டை டேப்லெட் செய்தார் நேஹா.

பின்னர் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் டுவிட்டரில் அடுத்த பதிவிட்டுள்ளார்.

Neha Twitter

சில உணர்ச்சிமயமான வி‌ஷயங்களை நான் டுவிட்டரில் பதிவு செய்தது பொழுதுபோக்காக அல்ல. என்னுடைய பிரச்சினை அல்ல. எனக்கும், என் கணவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அது என்னை சுற்றி பலருக்கு நடக்கும் வி‌ஷயங்கள்.

Neha twitter

அந்த மோசமானவர்கள் திருமணமானவர்கள் வாழ்க்கையுடன் தொடர்ந்து விளையாடுகிறார்கள். ஒரு பெண் இதுபற்றி எல்லாம் வெளிப்படையாக பேசினால் அதை மக்கள் ரகசியம் வெளியாகிவிட்டது என்கிறார்கள்.

எந்த ஒரு நாடகத்தையும், கவனத்தையும் ஈர்க்க நான் இல்லை. பெண்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு பதிவு செய்வதால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை. என் கணவரை பற்றி வந்த சில கருத்துக்கள் பாதிப்பை ஏற்படுத்துவதால் அவற்றை நீக்குகிறேன்.

Neha twitter

இந்த உணர்ச்சிமயமான பிரச்சினைகளை புரிந்து கொண்டதால் அதை நீக்கி இருக்கிறேன். ஆனால் இப்படி நாடகமாடும் பெண்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக போய் சேரும். சமூக வலைத்தளம் என்பது சக்தி வாய்ந்த ஒன்று. எனவே நல்ல வழியில் ஆதரவு கொடுங்கள். என்பதே இதன் சாராம்சம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top