fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் சூடுபிடிக்கும் கோக், பெப்சி விற்பனை! புறக்கணிக்கப்படும் உள்நாட்டு குளிர்பானங்கள்! வணிகர்கள் கைவிரிப்பு!

pepsi

மீண்டும் சூடுபிடிக்கும் கோக், பெப்சி விற்பனை! புறக்கணிக்கப்படும் உள்நாட்டு குளிர்பானங்கள்! வணிகர்கள் கைவிரிப்பு!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து வணிகர் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் தமிழகத்தில் இனி கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுத்தனர்.

இதையடுத்து உள்நாட்டு குளிர்பானங்கள் மீது மக்கள் பார்வை திரும்பியது. விற்பனையிலும் சூடுபிடித்தது. இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் வணிகர் சங்கங்கள் அறிவித்ததோடு சரி நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மீண்டும் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வணிகர்கள் சிலர் கூறுகையில், உள்நாட்டு குளிர்பானங்கள் தேவையான அளவு கிடைப்பதில்லை. மேலும் பலவித சுவைகளிலும் உள்நாட்டு குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதில்லை. எனவே பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பனை அதிகரிக்க இதுவே காரணம் என்று கூறியுள்ளனர்.

மக்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் தான் நாங்கள் விற்பனை செய்கிறோம்.

பன்னாட்டு குளிர்பானங்களை மக்கள் முழுமையாக ஒதுக்கினால் தான் பன்னாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற எங்கள் அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளனர்.

எப்போது எம் மக்கள் திருந்துவார்கள்?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top