1979ம் ஆண்டு கமல்ஹாசன் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா திரைப்படம் “நீயா” இன்று வரை ஹிட் ஆனா ஹாரர் படங்களுக்கு ஒரு முன் உதாரணம் என்றும் சொல்லலாம், தற்பொழுது 39 வருடம் கழித்து அதே பெயரில் நீயா-2 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

Neeya

இந்த படத்தின் இயக்குனர் கதைக்கு தேவைப்பட்டதால் தான் நீயா-2 என பெயர் வைத்ததாக கூறியுள்ளார், இந்த படத்தில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது, 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜ நாகம் படம் முழுவதும் வருகிறது.jai chennai 28

இந்த ராஜநாகம் பேங்காக்கில் தான் கண்டுபிடிக்கப்பட்டது இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இதன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் நடிகராக ஜெய் நடிக்கிறார் இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டர் இதில் இரண்டு விதமான பரிமாணத்தில் நடித்துள்ளார், பெண் பாம்பாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோர் நடித்துள்ளார்.

Lakshmi-Rai
Lakshmi-Rai

மேலும் இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைப்பெற்றது.அதை தொடர்ந்து , தலக்கோணம் , சென்னை , மதுரை , கொடைக்கானல் , சாலக்குடி பகுதிகளில் நடைபெறும்.

Catherine-Tresa

இந்த படத்தில் அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர் படமாக சுமார் 10 – கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.