Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீத்து சந்திரா பாட்டில் கேப் சேலஞ்ச்.! வைரலாகும் வீடியோ
ஹாலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான ஜேசன் ஸ்டேதம் என்பவர் தன் காலால் பாட்டிலின் மூடியை திறந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை பார்த்த பல பிரபலங்கள் காலால் மூடி திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தமிழில் ஆக்சன் கிங் தன் காலால் பாட்டில் மூடியை திறந்து அசத்தினார்.
அதன் பிறகு அக்ஷய் குமார், துப்பாக்கி பட வில்லன் போன்ற பாலிவுட் நடிகர்களும் காலால் பாட்டில் மூடியைத் திறக்கும் வீடியோவை வெளியிட்டு வந்தனர். தமிழ் சினிமாவில் ‘ யாவரும் நலம் ’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நீத்து சந்திரா.அதன் பிறகு இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரும் பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
So who was talking about #bottlecapchallenge Here it is with my buddies @lindsaylifestyle and @katjablasi Today Morning #workout #gym #challengeaccepted ?? ❤? pic.twitter.com/9WskaNiuCm
— Neetu N Chandra (@Neetu_Chandra) July 5, 2019
