Connect with us

Cinemapettai

ajith-boneykappoor

Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித் எப்படியாவது ஹிந்தி சினிமாவில் நடிப்பதற்கு சம்மதம் வாங்குங்க. தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்த பிரபல நடிகை.

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்துவருகிறார்.

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. சமீபத்தில் கூட தயாரிப்பாளர் போனி கபூர் ” படத்தின் ரஷ் பார்த்தேன் சூப்பர் ஆக வந்துள்ளது. அஜித் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார். அவர் ஹிந்தி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என ஆவலாக உள்ளது. அவருக்காக 3 ஆக்ஷன் கதைகள் வைத்துள்ளேன். அவர் மட்டும் எதாவது ஒன்றிற்கு ஓகே சொன்னால் உடனே படப்பிடிப்பு செல்லலாம்.” என ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்நிலையில் நீத்து சந்திரா (நடிகை மற்றும் மாடல். அதாங்க யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் படங்களில் நடித்தாரே) போனி கபூரின் ஸ்டேட்டஸுக்கு பதில் தட்டியுள்ளார்.

“நடிகர் அஜித்தின் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் நான். என்றுமே எனது பாவரிட் நடிகர் அவர். சீக்கிரமா அவரை சம்மதிக்க வைங்க போனி கபூர் ஜி. அஜித் பாலிவுட் வந்தால் ஹிந்தி சினிமாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் அது.” என பதிவிட்டுள்ளார்.

சினிமாபேட்டை குசும்பு

நீத்து சந்திரா டேக்வொண்டோவில் பிளாக் பெல்ட் வேறு வைத்துள்ளார். அப்போ ஜேம்ஸ் பான்ட் ஸ்டைலில் படம் எடுங்க போனி கபூர் ஜி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top