Connect with us

Education | கல்வி

நீட் தேர்வில் 7வது இடத்தை பிடித்த தமிழகமாணவன் … எந்த மாவட்டம் தெரியுமா .விவரம் உள்ளே

NEETEXAM

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் தஞ்சை மாணவர் அகில இந்திய அளவில் ஏழாவது இடத்தைபிடித்துஉள்ளார் .நீட் தேர்வு ஆனது கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வுகளின் முடிவுகள் கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டது , தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் தமிழகத்தினை சேர்ந்த மாணவர் தர வரிசை பட்டியலில் 7ம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

NEET

NEET

நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் தர வரிசை பட்டியலில் 7ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார் .இவர் தற்போது சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

நீட் தேர்வில் 7ம் இடத்தைப் பிடித்தது பற்றி செரின் பாலாஜி கூறுகையில், ‘நான் 10ம் வகுப்பு வரை தஞ்சையிலும், பிளஸ் 1, பிளஸ் 2வை திருச்சி எஸ்.ஆர்.வி மெட்ரிக் பள்ளியில் படித்தேன் எனவும் பிளஸ் 2 வில் 1,180 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றேன். இதையடுத்து இப்போது நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 7ம் இடத்தைப் பிடித்துள்ளேன் என்றார் . முன்புள்ள ஆறு பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . எனவே தமிழக அளவில் பார்த்தால் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top