Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீட் தேர்வில் 35 வது இடத்தில தமிழகம் !
நீட் தேர்வு
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடந்தது. இந்தியா முழுவதும் இத்தேர்வை எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 120000 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அதில் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் வெறும் 45,336 நபர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 39.55 % தான். தமிழகம் 35 வது இடத்தை பெற்றுள்ளது.
பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்னும் மாணவி 691/720 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தெலங்கானைவை சேர்ந்த ரோஹன் புரோஹித், டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷு ராணா 690 எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். தமிஸ்த்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர் தேசிய அளவில் 676 மதிப்பெண் பெற்று 12 வது இடத்தை பெற்றார்.
ராஜஸ்தான் , டெல்லி, ஹரியானா , ஆந்திரா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் தான் 70 % மேல் தேர்ச்சி பெற்றுள்ளது.
விரைவில் பாடத்திட்ட முறையில் மாற்றம் அல்லது தரமான கோச்சிங், கொண்டு வராவிடின், தமிழகத்தில் மருத்துவ படிப்பது என்பது கனவாகவே ஆகிவிடுமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
