Videos | வீடியோக்கள்
மனதை வருடும் இசையில் உருவான நீங்க முடியுமா பாடல்.. சைக்கோ பட பாடல் லிரிக் வீடியோ
புது புது படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு தருவது மிஷ்கினுக்கு கைவந்த கலை. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிதி ராவ் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் சைக்கோ.
முன்னதாக இதன் டீசர் வெளிவந்து இணையத்தில் பட்டையை கிளப்பியது. உதயநிதி ஸ்டாலின் தனது வழக்கத்திற்கு மாறாக பார்வையற்றவராக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் மற்றும் இயக்குனர் ராம் போன்றோரும் நடித்துள்ளனர்.
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இசை அமைப்பதில் வல்லவரான இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் புரோடக்சன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இளையராஜாவின் இசையில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள நீங்க முடியுமா மெலோடி பாடல் தற்போது இணையதளங்களில் வெளியாகி இதயங்களை வருடிக்கொண்டு உள்ளது.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உன்ன நெனச்சு என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
