‘சென்னை 28 : செகண்ட் இன்னிங்க்ஸ், எனக்கு வாய்த்த அடிமைகள்’ படங்களுக்கு பிறகு ஜெய் நடிப்பில் விறுவிறுப்பாக ரெடியாகி வரும் படம் ‘பலூன்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் என்பவர் இயக்குகிறார். இதில் ஜெய்-க்கு ஜோடியாக ஜனனி அய்யர், அஞ்சலி என டபுள் ஹீரோயின்ஸாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

 

jai chennai 28’70 MM எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இதனை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ளார். இதுவும் தமிழ் சினிமாவில் டிரெண்டு அடித்துக் கொண்டிருக்கும் ஹாரர் ஜானராம். சமீபத்தில் இதன் போஸ்டர்ஸ், ப்ரீ-லுக் டீஸர் & ஃபர்ஸ்ட் லுக் டீஸர், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, விஷ்ணு, சூர்யா, சிம்பு ஆகியோரால் டிவிட்டப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.