kamal

கமல் சமீபகாலமாக அரசியல் விஷயங்களில் அதிகமாகவே அக்கறை செலுத்துகிறார். காரணம் மாணவர்கள் நாட்டைக் கையில் எடுத்து விட்டார்கள்.

இனி மிரட்டல் அரசியல் மக்களிடம் எடுபடாது. ஜெ., போன்ற சர்வாதிகாரிகள் இனி தோன்ற முடியாது. அப்படி வந்தால் எம் மாணவன் வீதிக்கு வந்து அவர்களை விரட்டுவான்.

சு.சாமிகள் இனி அறிக்கை,டுவிட்டரில் மட்டுமே போராடும் கிழங்கள். நாங்கள் உங்கள் பேரங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் ஜெயில் ஆட்சி, பண ஆட்சி எங்களுக்கு தேவை இல்லை. தேர்தல் நடத்து. அதில் நாங்கள் எங்கள்  ஆட்சியை அமைத்துக் கொள்வோம். மாணவன் ஆள்வான். ஒருவேளை தேர்தல் நடத்த தவறினால் நான் வீதிக்கு வருவேன்.

ஆனால், தனியாக வரமாட்டேன். இப்படி ஒரு போடு போட, பிஜேபி தலைமை ஆடிப் போய்விட்டது. தமிழிசை உடனே பதிலடி கொடுத்தார். பன்னீர் வரவேற்றுள்ளார்.