2 பேரும் அணிக்குள் வேண்டும்.. 20 ஓவர் உலகக் கோப்பை வெல்லும் யுக்தியை சொல்லிக்கொடுத்த கவாஸ்கர்

20 ஓவர் உலகக்கோப்பை வருகிற அக்டோபர் 16 இல் தொடங்கி நவம்பர் 13 வரை நடக்கவிருக்கிறது. இதற்காக அனைத்து நாட்டு வீரர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வாங்கிய பலத்த அடியை உலக கோப்பையை வென்று சரி செய்யும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணி உலககோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது. இவ்விரு அணிகளுடன் 20 ஓவர் போட்டி தொடர்களில் பங்கேற்க உள்ளது.

Also Read: அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இந்திய அணி பந்து வீச்சிலும் ,பேட்டிங் வரிசையிலும் ஓரளவு சமமான நிலையில் வீரர்களைத் தேர்ந்தெடுத்து வலிமைமிக்க அணியாக உலகக்கோப்பை செல்லவிருக்கிறது. 15 பேர் கொண்ட பட்டியலில் விளையாடும் 11 வீரர்களாக யார், யாராக இருப்பார்கள் என்ற ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லாத ஒரு அணி. இப்போது அந்த 11 பேர் கொண்ட அணியில் மிடில் ஆர்டர் வீரர்களுக்கு பல போட்டிகள் நிலவி வருகிறது. குறிப்பாக ரிஷப் பண்ட மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருள் யாராவது ஒருவர்தான் அணியில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Also Read: தலைகனம் இல்லாத ராகுல் டிராவிட்.. கங்குலியை வியக்க வைத்த அந்த செயல்!

ஆனால் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கூறுகையில் ரிஷப் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் பிளேயிங் லெவலில் இருக்க வேண்டும். ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட், ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் தினேஷ் கார்த்திக் விளையாட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி வருகிறார்.

இந்திய அணி இப்படி விளையாடுமேயானால் எளிதில் உலக கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த யுக்தியை கையாண்டால் எதிரணி வீரர்களை வலக்கை, இடக்கை பேட்ஸ்மேன்களை வைத்து குழப்பம் அடைய செய்யலாம் என்றும் கூறுகிறார்.

Also Read: மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்