Videos | வீடியோக்கள்
அஜித்தின் தீவிர ரசிகை நஸ்ரியா வெளியிட்ட வலிமை டீசர்.. நாடி, நரம்பு, ரத்தம், சதையில் தல ரத்தம் ஊறிய ரசிகர் வீடியோ
சினிமாவில் உள்ள பல நடிகர், நடிகைகள் தல அஜித்தின் ரசிகராக இருக்கின்றனர். அந்த வகையில் எக்ஸ்பிரஷன் குயின் நஸ்ரியா மிகப்பெரிய அஜித் ஃபேன்.
எந்த இடத்திலும் தல அஜித்தை அவர் விட்டுக்கொடுக்க மாட்டார். ஒருமுறை ஒரு விருது நிகழ்ச்சியில் அவர் தல அஜித் பெயரை சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது.
தல அஜித் படத்தைப் பற்றிய எந்த ஒரு சின்ன விஷயம் வந்தாலும் நஸ்ரியா அதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போட்டு விடுவார்.
அந்த வகையில் தல அஜித் ரசிகர் ஒருவர் உருவாக்கிய வலிமை படத்தின் டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.
நஸ்ரியா வெளியிட்ட அந்த வீடியோ உண்மையில் பார்ப்பதற்கு வலிமை டீசர் போலவே அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது.
இந்த வீடியோ தான் தற்போது யூ டியூப்பில் வைரலாக உள்ளது. மேலும் விரைவில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என செய்திகள் வெளிவந்துள்ளன.
