நஸ்ரியாவிற்கு கிடைத்த விடுதலை.. அன்பால் கட்டிப் போட்ட பிரபல நடிகர்

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். அதிலும் நஸ்ரியாவின் பிரதர் வசனம் ரசிகர்களிடம் தற்போதும் ஃபேமஸ்.

அதன்பிறகு மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த 2014 இல் மலையாள சினிமா பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நஸ்ரியா திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அன்டே சந்தரானிக்கி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நானி நடித்திருக்கிறார். தமிழில் இந்த படத்தை அன்டே சுந்தரா என்ற பெயரில் வெளியிடயுள்ளனர்.

இப்படத்தில் ரோகிணி, நதியா, ராகுல் ரம்யாகிருஷ்ணனா பல நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஜூன் 10-ஆம் தேதி இப்படம் வெளியாகயுள்ளது. இப்படத்தை மைட்டி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு ஊடகங்களுக்கு நஸ்ரியா பேட்டி அளித்து வருகிறார். அப்போது சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா மீண்டும் வருவதற்கான காரணத்தை கேட்டிருந்தனர். என் கணவர் பகத் பாசில் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார்.

நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டேன். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்ததால் நடித்தேன் என நஸ்ரியா கூறியுள்ளார். பெரிய ஹீரோக்கள் தங்களது மனைவியை சினிமாவில் நடிக்கக்கூடாது என கட்டளையிடும் நிலையில் மீண்டும் தனது மனைவியை சினிமாவில் கம்பேக் கொடுக்க அன்புக் கட்டளை போட்டுள்ளார் பகத் பாசில்.

- Advertisement -spot_img

Trending News