செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிள்ளையை ரொம்ப அருமையா வளத்துருக்கீங்க.. இப்படி உண்மையை போட்டு உடைச்சுட்டீங்களே நஸ்ரியா..

மலையாள தொலைக்காட்சி சேனலில் ஆங்கராக பணியாற்றியவர் நஸ்ரியா நஸீம். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார் நஸ்ரியா. மாட் டாட் என்ற மலையாள படத்தில் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்நது தமிழில் நேரம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ஆரம்பத்தில் இவரை போயி ஏன் கல்யாணம் செய்தார் என்று ட்ரோல் செய்தார்கள். ஆனால் தற்போது, இவரின் மனைவி தான் நஸ்ரியா என்று சொல்லும் அளவிற்கு ஃபஹத் பாசில் வளர்த்துள்ளார். இவருக்கு ட்ரான்ஸ் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இப்படி உண்மையை உடைச்சுட்டீங்களே நஸ்ரியா

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இதில் பன்வார் சிங் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். தற்போது 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், நஸ்ரியா ஒரு உண்மையை போட்டு உடைத்துள்ளார். முதல் பாகத்தில் சும்மா வந்துட்டு தான் போவார். ஆனால் பார்ட் 2 ஃபஹத் பாசிலோட ஒன் மேன் ஷோ-வா இருக்கும். இதில் இவர் தான் முழுக்க முழுக்க வருவார். இது முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும். முதல் பாகம் அவருடைய அறிமுகம் தான், உண்மையில் ஃபஹத் யார் என்பதை 2-ம் பாகம் காட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அப்போ அல்லு அர்ஜுன டம்மி ஆக்குற அளவுக்கு உங்கள் காதல் கனவொரோட performance இருக்கும்.. அதானே.. என்று இப்போதே கொளுத்தி போட ஆரம்பித்துவிட்டார்கள் நெட்டிசன்கள். பொதுவாகவே அவருடன் யார் நடித்தாலும், அவர்களை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு இவர் நடிப்பார். இந்த படத்திலிருந்து ஃபஹத் பாசிலிற்க்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி விடும்.

- Advertisement -

Trending News