Connect with us

Cinemapettai

போலீஸே போலீசை தேடும் வேட்டை- யதார்த்தமான த்ரில்லர் நயாட்டு விமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

போலீஸே போலீசை தேடும் வேட்டை- யதார்த்தமான த்ரில்லர் நயாட்டு விமர்சனம்

தரமான மெஸேஜ் அதே சமயம் கருத்தையும் பதிவிடும் படங்கள் மலையாள சினிமாவில் தான் அதிகம் வருகின்றது என்றால் அது மிகையாகாது. அப்படியொரு படம் தான் இந்த Nayattu (வேட்டை). கொரானா இரண்டாம் அலைக்கு முன் ரிலீஸ் ஆன படம், சமீபத்தில் நெட் பிலிக்ஸ் தலத்தில் வெளியாகி உள்ளது.

மாதவனின் மாறா  ஒரிஜினல் சார்லி படத்தை இயக்கிய மார்ட்டின் ப்ராக்கத் இயக்கியுள்ள படம். குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா ஷாஜயன் முக்கிய ரோல்களில் நடித்துள்ள படம்.

கதை – போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் (மணியன்) , அதே ஸ்டேஷனில் வந்து இணைகிறார் புதிய நபர் (பிரவீன்). (சுனிதா) பெண் போலீஸ் ஒருவர் தனது உறவினர் (பிஜு) பற்றி சர்கில் இன்ஸ்பெக்டரிடம் பேசி, கூப்பிட்டு கண்டிக்குமாறு சொல்கிறார்.

பிரவீன் மற்றும் மணியன் இருவருக்கும் அந்த நபருடன் வாக்குவாதம், கைகலப்பு ஏற்படுகிறது. கடுப்பாகி அடித்து அவனை லாக் அப்பில் போடுகின்றனர். அவனது நண்பர்கள் அதனை வீடியோ எடுக்கின்றனர். எனினும் தேர்தல் சமயம் மற்றும் தலித் கட்சி உறுப்பினர் என்ற காரணத்தால் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக பிஜுவை விட்டு விடுகின்றனர்.

பின்னர் இரவு மணியன் மற்றும் பிரவீன் அவரது ஜீப்பில், அவரின் மாமா பையன் வண்டியை ஓட்ட விருந்துக்கு செல்கின்றனர். அங்கு இரண்டு ரவுண்டு குடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு சுனிதாவை அழைத்துக்கொண்டு திரும்புகின்றனர்.

இந்நிலையில் காலை வீடியோ எடுத்த நபர் பைக்கில் வேகமாக வர அங்கு விபத்து ஏற்படுகிறது. அவன் யார் என்று தெரிந்த பின்பு ஹாஸ்பிட்டல் கூட்டி செல்கினறனர். பிரவீன் ஜீப் ஓட்ட, இவர் செல்லும் பொழுதே அவன் இறந்துவிடுகிறான். அங்கு கூட்டம் கூட இவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பித்து ஸ்டேஷன் வந்தடைகின்றனர்.

nayattu

இவர்கள் பக்கம் தவறில்லை என்றாலும் தேர்தல் நேரம் தலித் ஒட்டு மிஸ் ஆக கூடாது என முதல் அமைச்சர் நினைக்க, இவர்களை கைது செய்ய திட்டமிடுகினற்னர். அங்கிருந்து இவர்கள் மூவரும் எப்படி தப்பிக்கின்றனர், போலீஸ் டீம் இவர்களை துரத்தி இவர்களை கைது செய்தனரா இல்லையா என்பதே மீதி கதை. இறுதியில் இந்த மூவரின் நிலை என்ன ஆனது என்பதனை திக் திக் என சுவாரஸ்யமாக படமாகியுள்ளனர் இந்த டீம்.

சினிமாபேட்டை அலசல் – போலீஸ் என்பவர்கள் அதிகாரம் இருந்தும் அரசியல் ஆசாமிகள் கைபாவை என்பதனை இப்படம் துகிலுருந்து காட்டுகிறது. போலீசில் ஒரு சிலர் மனிதநேயத்துடன் உதவ, மற்றவர்கள் தங்களுக்கு சொல்லப்பட்ட வேலையை செய்கின்றனர். நாமும் இணைந்து இந்த இன்வெஸ்டிகேஷனில் ஈடுபடுவது போன்ற உணர்வை இப்படம் தருகிறது. யதார்த்தமாக இப்படத்தை இயக்கிய படக்குழுவுக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– இதுவரை மாமூல் வாங்கும், எளியவர்களை போட்டடிக்கும் போலீஸ் என தான் நாம் பார்த்துள்ளோம் , எனினும் அரசியல் சூழ்ச்சியில் சிக்கி இவர்கள் படும் பாடு நம்மை உறைய வைக்கிறது.

இவர்களிடம் மோத முடியாது என ஒருவர் தற்கொலை செய்வது, அதனை போலீஸ் உயர் அதிகாரிகள் எப்படி மாற்றுகின்றனர் என்பதெல்லாம் கொடூரத்தின் உச்சம். இறுதியில் நாயகன் மற்றும் நாயகி விழி பிதுங்கி செய்வது அறியாது முழிக்க முடிகிறது படம்.

சினிமாபேட்டை ரேட்டிங்  3.75 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top