Reviews | விமர்சனங்கள்
திக் திக் திரில்லர்- நயன்தாராவின் ஓ 2 விமர்சனம்
அறிமுக இயக்குனர் ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ள படம் தான் ஓ 2. சர்வைவல் திரில்லர் ஜானர் படம். இது போன்ற படங்கள் ஹாலிவுட் சினிமாவில் ஜாஸ்தி வெளிவரும், நம் ஊரில் குறைவு தான்.
கதை– நயன்தாரா மற்றும் அவரது மகன் ரித்விக், அவனது சிகிச்சைக்காக கேரளா புறப்படுகின்றனர். சுவாசிப்பதில் அவனுக்கு சிரமம், எனவே ஆக்சிஜென் சிலிண்டர் எப்பொழுதும் தேவை என்ற நிலை.
இவர்கள் சென்ற பேருந்து நிலச்சரிவில் சிக்குகிறது. போலீஸ், ஓடிப்போக நினைக்கும் காதல் ஜோடி, முன்னாள் அமைச்சர், ரிலீஸ் ஆன குற்றவாளி என பேருந்தில் சிக்கியிருப்பது வெவ்வேறு ஆட்கள். காப்பாற்ற ஆட்கள் வரும் வரை என்ன நடக்கிறது என்பதே கதை.
சினிமாபேட்டை அலசல்– இயற்கையை நாம் சீரழிக்கிறோம் என்பதனை புரிய வைக்கவே இப்படம். மெஸேஜ் சொல்லும் திரில்லர் சினிமா. பல காட்சிகள், வசனங்கள் சூப்பர். நயன்தாரா, ரித்விக் மற்றும் ஒளிப்பதிவாளர் மிக பெரிய ப்ளஸ் இந்த படத்துக்கு. உயிர் போகும் நேரத்தில் மனிதனின் குணாதிசயம் எப்படியெல்லாம் மாறும் என நம் முன்னே பட பிடித்து காமித்துள்ளார் இயக்குனர்.
தாராளமாக ஒருமுறை பார்க்க கூடிய படம் தான் இந்த ஆக்சிஜன். எனினும் கிளைமாக்ஸ் காட்சியில் அதிக சிரத்தை மேற்கொண்டிருக்கும் பட்சத்தில் சூப்பர் படமாக மாறியிருக்கக்கூடும்.
சினிமாபேட்டை ரேட்டிங் 2.75/5
