fbpx
Connect with us

ராஜ்கிரணுக்கு போட்டியாக இலை முழுக்க சோறுடன் அம்மன் நயன்தாரா- இது சைவ விருந்து

rj balaji nayanthara amman

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராஜ்கிரணுக்கு போட்டியாக இலை முழுக்க சோறுடன் அம்மன் நயன்தாரா- இது சைவ விருந்து

RJ பாலாஜி – ரேடியோவில் பணியாற்றி வந்தவர். சுந்தர் சியின் ஆதரவுடன் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது காமெடியன் என்ற லிமிட்டை கடந்து ஹீரோ, இயக்குனர் என கலக்கி வருகிறார் ஆர் ஜே பாலாஜி.

‘LKG’ படத்தை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் பாலாஜி கதை, திரைக்கதை எழுதி, இணைந்து இயக்கி, நடிக்கும் படமே மூக்குத்தி அம்மன். இப்படத்தை இவருடன் இணைந்து NJ சரவணனும் இயக்குகிறார். அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய், இப்படத்திற்க்கு க்ரிஷ் இசை.

mookuthi-amman

mookuthi-amman

ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வரும் என சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக கூறியிருந்தார். ஆனால் படம் OTT ரிலீஸ் தான். ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் மூக்குத்தி அம்மன் படம் மிகப் பெரிய விலைக்கு விற்று விட்டாராம் பாலாஜி.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு அணிகள் முத்தும் போட்டி சமயத்தில் ட்ரைலர் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

nayanthara in mookutthi amman

இந்த போஸ்டரில் நயன்தாரா இலை முழுக்க பதார்த்தங்கள் இருக்க லேடி சூப்பர் ஸ்டார் இப்போ லேடி ராஜ்கிரண் என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Continue Reading
To Top