வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கல்யாணத்துக்கு பின் வெடிக்கும் முதல் சண்டை.. நயன்தாராவிற்கு வந்த சக்காளத்தி

நயன்தாரா பல சர்ச்சைகளுக்கு பிறகு இப்போதுதான் ஒரு வழியாக செட்டில் ஆகியுள்ளார். தன்னுடைய பல வருட காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் கல்யாணம் முடிந்து ஒன்றரை மாதத்திற்குள்ளேயே நயன்தாராவுக்கு அடுத்த பஞ்சாயத்து வந்துள்ளது.

அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படம் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே சமந்தாவுடன் ஓவர் நெருக்கம் காட்டினார் விக்னேஷ் சிவன் என்ற செய்திகள் வெளியானது. இதனால் நயன்தாராவும் விக்னேஷ் சிவன் மீது கடுப்பில் இருக்கிறார் என கூறப்பட்டது.

ஒருவழியாக படமும் ரிலீசாகி ஒரு நல்ல வசூலை ஈட்டி தந்தது. அதன்பின்பு நயன்தாராவும் தனது பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். பாலிவுட்டில் முதன்முறையாக களமிறங்கும் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது விக்னேஷ் சிவன் லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கயுள்ளார். இப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்பொழுது அஜித்துக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இதை அறிந்த நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனிடம் பிரச்சினை செய்து வருகிறாராம். ஏற்கனவே காத்துவாக்குல 2 காதல் படத்தில் ஏற்பட்ட நெருக்கம் மட்டுமல்லாமல் தற்போது சமந்தாவுக்கு உச்சகட்ட சிபாரிசு என இரண்டையும் முடிச்சுப்போட்டு சக்காளத்தி சண்டையை ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.

கல்யாணத்துக்கு பிறகு சண்டை வருவது என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் முதல் சண்டையை சக்காளத்தி சண்டை வருவது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. மேலும் ஏகே 62 படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க கூடாது என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதாக போல் தெரிகிறது.

- Advertisement -

Trending News