fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ஐரா திரைவிமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ஐரா திரைவிமர்சனம்.

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள படம்.

சார்ஜுன் மற்றும் பிரியங்கா ரவீந்திரன் இணைந்து தான் இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர். தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இந்திரன். இந்த இந்திரனின் வாகனம் வெள்ளை நிறம் கொண்ட யானையாகும். இந்த யானைக்கு ஐராவதம் என்று பெயர். இத்தகைய பவர் புல் தலைப்பு, டபிள் ஆக்ஷனில் நயன்தாரா (கருப்பு + வெள்ளை) என எதிர்பார்ப்பை கூட்டிய படம் எனினும் ரசிகர்களை திருப்த்தி படுத்தியதா இல்லையா என வாங்க பார்ப்போம் …

ஐரா

ட்ரைலரில் ப்ளூ சட்டை மாறன் சொல்வது போல தான் ஆரம்பம் ஆகிறது படம். சிட்டியில் மீடியா வேலையில் இருக்கும் நயன்தாரா கல்யாணத்தை டபாய்த்து கிராமத்துக்கு வருகிறார். அங்கு அமானுஷ்ய நிகழ்வுகள் என நகர்கிறது கதை. கலையரசன் மற்றும் பிளாஷ் பேக் பகுதியில் தான் என்ன நடக்கின்றது ஏன் என்றெல்லாம் சொல்லியுள்ளார்கள்.

பிளஸ்

பவானி நயன்தாரா, இசை எமோஷனல் பகுதிகள்

மைனஸ்

அதீத பில்ட் அப் பார்த்து சலித்த ஹாரர் சொதப்பல் கிளைமாக்ஸ்

சினிமாபேட்டை அலசல்

airaa-teaser

airaa-teaser

மிக ஸ்டைலிஷ் மேக்கிங்கில் உருவாகி உள்ளது இப்படம். ஹாரர் ஜானர் என்பதனை தாண்டி பல விஷயங்களை தன்னுள் கொண்டுள்ளது. பட்டம்பூச்சியை வைத்து கான்செப்ட் சொல்ல வந்த இயக்குனர் பல இடங்களில் தடுமாறி உள்ளது அப்பட்டமாக சாமானிய ரசிகனுக்கே தெரிகின்றது. ப்ளாக் அண்ட் வையட் டோன் என்றெல்லாம் யோசித்த டீம் அழகிய பேக்கேஜாக படத்தை வழங்கும் இடத்தில் மிஸ் செய்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒருவேளை மன்மதன் படத்தில் டபிள் ஆக்ட் என்பதை மறைத்தது போல சஸ்பென்சாக வைத்திருந்தால் நல்ல ரீச் ஆகி இருக்கலாம். ஆக மொத்தத்தில் ஐரா, டோரா படத்திற்கு மேல் மாயா படத்திற்கு கீழ்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.25 / 5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top