Tamil Cinema News | சினிமா செய்திகள்
மகன் வயது நடிகருடன் படு ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
சமீபகாலமாக நயன்தாரா பற்றிய செய்திகள் அதிகமாக சமூக வலைதளங்களில் பரவி உள்ளன. நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மவுசு தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் வெறும் செய்தியின் மூலம் மட்டுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் நயன்தாரா.
நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன.
இதற்கிடையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சொந்த தயாரிப்பில் உருவாகும் படம் நெற்றிக்கண். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வித்யாசமான நடிப்பில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் பெயரை வைத்துள்ளது இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தை ஜில் ஜங் ஜக், காதல் டூ கல்யாணம் போன்ற படங்களை இயக்கிய மில்லண்ட் இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடிக்க உள்ளாராம்.
நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுக்கு பிளாஷ்பேக் போர்ஷன் ஒன்று இருக்கிறதாம். இதில் நயன்தாரா இளம் வயதில் நடிப்பதைப் போல படமாக உள்ளது.
36 வயதான நயன்தாரா 22 வயதான சக்தி சரவணன் என்பவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க உள்ளாராம். சக்தி சரவணன் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
