fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விறுவிறுப்பாக தயாராகும் அறம் 2.. ஆனால் நயன்தாராவுக்கு பதில் இவர்தான் நாயகி.. இதுக்கு பேசாம சும்மாவே இருக்கலாம்!

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விறுவிறுப்பாக தயாராகும் அறம் 2.. ஆனால் நயன்தாராவுக்கு பதில் இவர்தான் நாயகி.. இதுக்கு பேசாம சும்மாவே இருக்கலாம்!

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா(nayanthara). கமர்சியல் படங்கள் என்றாலும் சரி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருந்தாலும் சரி, பிரித்து மேய்ந்து கொண்டு இருக்கிறார்.

சமீபகாலமாக இவரது நடிப்பில் வரும் அனைத்து படங்களும் பெரிய அளவில் வசூல் செய்கின்றன. இருந்தாலும் நாயகியாக இவர் நடித்த சில படங்கள் மண்ணை கவ்வியதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கதையின் நாயகியாக இவருக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்த திரைப்படம் அறம். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் சிக்கி தவிக்கும் கதையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. தற்போது அறம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் அந்த படத்தில் நயன்தாரா கிடையாதாம். அதற்கு மாற்றாக கீர்த்தி சுரேஷ்(keerthi suresh) நடிக்க வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம். கீர்த்தி சுரேஷும் சமீபகாலமாக கதையின் நாயகியாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

நடிகையர் திலகம், பென்குயின் ஆகிய படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். இருந்தாலும் நயன்தாராவின் கதாபாத்திரத்தை இவரால் ஈடு செய்ய முடியுமா என்றால் கேள்விக்குறிதான். வியாபார ரீதியாகவும் கீர்த்தி சுரேஷ் விட நயன்தாராதான் முன்னிலையில் இருக்கிறார்.

எதை வைத்து இப்படி முடிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் கூட இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top