தமிழ் சினிமாவே எப்போதும் ஹீரோக்களின் பிடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் பல வருடம் அப்படித்தான் இருக்கும் போல.

aaram-nayathara

ஆனால், அத்தனை ஹீரோக்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். சோலோ ஹீரோயினாக மாயா, டோரா என்று மிரட்டிய இவர் அறத்திலும் மிரட்டினாரா? பார்ப்போம்.

படத்தின் ஆரம்பத்திலேயே அதிகாரத்தை மீறியதற்காக நயன்தாரா மீது ஒரு விசாரணை நடக்கின்றது. நயன்தாரா தன் விளக்கத்தை சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது.

aaram-nayathara

சென்னைக்கு வெளியே தண்ணீருக்கே பல கிலோ மீட்டர் சென்று எடுக்கும் நிலையில் ஒரு கிராமம். ஒரு வசதியும் இல்லாமல் இருக்கும் இடத்தில் நயன்தாரா கலெக்டராக வருகின்றார்.

அதிகம் படித்தவை:  மீண்டும் தன் புதிய ஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட ராய் லக்ஷ்மி - யப்பப்பா !!!!

அந்த ஊரில் இருக்கும் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்துவிடுகின்றது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை வெளியே எடுக்க நயன்தாரா மற்றும் அந்த ஊர் மக்கள் எடுக்கும் பரபரப்பான முடிவே படத்தின் மீதிக்கதை.

aaram-nayathara

நயன்தாராவை இப்போது ஒருமனதாக தலைவி என்றே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் அவரது ரசிகர்கள். குறிப்பாக அறம் படத்தில் ஐஏஎஸ் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக பணியாற்றப் போகிறேன், அதிகாரத்தை எனக்கு அவர்கள் வழங்குவார்கள் என்று அவர் வசனம் பேசியதை வைத்து, அடுத்து நயன்தாராவின் களம் அரசியல்தான் என்றெல்லாம் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  உங்கள் பேவரிட் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உண்மை பெயர்கள் தெரியுமா?
aaram-nayathara

நேற்று உலகெங்கும் அறம் படம் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு. ஊரெங்கும் இந்தப் படம் குறித்த பேச்சுதான். இந்த நிலையில் அறம் படத்தைக் காண இன்று பிற்பகல் சென்னை காசி தியேட்டருக்கு வருகை தந்தார் நயன்தாரா.

அவரைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஓடிவந்து வரவேற்றனர். அறம் படத்தில் அவருக்கு என்ன கெட்டப்போ, அதே மாதிரி சேலை – ரவிக்கை அணிந்து வந்திருந்தார் நயன்தாரா. ரசிகர்களைப் பார்த்து சிரித்தபடி கையாட்டினார்.

aaram-nayathara

மதிவதனி, வெல்கம். படம் பிரமாதம்.. வாழ்த்துகள்… இதே மாதிரி கதைகளில் நடிங்க… என்று அவருக்கு வாழ்த்துக் கூறினர் ரசிகர்கள்.