fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா

nayanthara-vignesh-cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா

கொரோனாவின் ருத்ரதாண்டவம் இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகிறது, இதனால் சினிமா பிரபலங்களும் முடங்கிப் போய் உள்ளனர். முக்கியமாக தமிழ் சினிமாவுக்கு அடையாளமாக இருக்கும் கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி பகுதிகளில் அதிகமான கொரோனாவின் பதிப்பு எண்ணிக்கை இருக்கிறது.

இந்த காரணத்தினால் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், மிஸ்கின் போன்றவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர், இதனோடு சேர்ந்து கொரோனாவுடனும் குடும்பம் நடத்தி வருவதாக வெளியான செய்தி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது வதந்தியாக இருந்தால் விக்னேஷ் சிவன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தால் நல்லா இருக்கும்.

இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் சமீபத்தில் பதிவிட்ட வாட்ஸ்அப் பதிவில், நிறைய சினிமா பிரபலங்கள் பல லட்சம் ரூபாய் செலவழித்து சிகிச்சை பெற்று வருவதாகவும்.

இல்லாதவர்களின் நிலை மிகவும் கொடுமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதனால் அனைவரும் பாதுகாப்பான வாழ்க்கை முறையை கையாள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் பூரணமாக குணம் அடையலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து வருகிறார். கொரோனா பாதிப்பில் நயன்தாரா உள்ளார் என்ற செய்தியைக் கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கு விக்னேஷ் சிவன் அளித்துள்ள அறிக்கையில், அப்படி ஒன்றும் இல்லை நயன்தாரா நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top