வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அடடடடா, தங்கமே பாடலுக்கு வைப் செய்யும் நயன்-விக்கி மகன்கள்.. உங்களுக்கும் நானும் ரவுடி தான் பாட்டு தான் புடிக்குமாப்பா!

Nayanthara: நயன்தாரா மீது எவ்வளவு தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு தாயாக அவர் நிறைய விஷயங்களில் ஜெயித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுக்கு திருமணமாகி ஒரு சில மாதங்களில் அழகான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களானார்கள்.

குழந்தைகள் பிறந்த புதிதில் சரகோசி முறையில் நயன்தாரா குழந்தை பெற்றெடுத்தது பற்றி பெரிய அளவில் சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் அந்த குழந்தைகளின் புகைப்படங்கள் வெளிவரும் பொழுது மொத்த நெகட்டிவிட்டியும் காணாமல் போய்விட்டது.

தங்கமே பாடலுக்கு வைப் செய்யும் நயன்-விக்கி மகன்கள்

ஒரு குழந்தை அச்சு அசல் நயன்தாரா போல இருப்பதாகவும், இன்னொரு குழந்தை விக்னேஷ் சிவன் போல இருப்பதாகவும் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். அதிலும் ஜெயிலர் படத்தில் வரும் ரத்தமாறே பாடலை தன்னுடைய குழந்தைகளுக்காக விக்னேஷ் சிவன் எழுதியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் வெளியான தீமா பாடலில் கூட சுருள் முடியுடன் இரு மகன்கள் என்ற வரியை இணைத்திருப்பார். சமீபத்தில் நயன்தாராவின் டாக்குமென்ட்ரி வீடியோவில் நானும் ரவுடிதான் பட சம்பந்தப்பட்ட எந்த வீடியோ மற்றும் பாட்டையும் உபயோகிக்க தனுஷ் காப்புரிமை வழங்காதது பெரிய அளவில் பேசும் பொருளானது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் டிவியில் நானும் ரவுடிதான் படத்தில் வரும் தங்கமே பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் வரும் அப்பப்பப்பா, அடடா போன்ற வார்த்தைகளை நயன்தாராவின் இரண்டு மகன்களும் தங்கள் மழலை மொழியில் அவ்வளவு அழகாக சொல்கிறார்கள்.

Nayan wikki sons
Nayan wikki sons

அப்பா பாட்டு எழுத, அம்மா அதில் நடிக்க பிள்ளைகள் எவ்வளவு அழகாக ரசிக்கிறார்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் கிண்டலாக அட உங்களுக்கும் நானும் ரவுடிதான் படம் தான் புடிச்சிருக்கா என கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News