நடிகை நயன்தாரா தற்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார், இவர் நடித்து நடித்து வரும் படங்கள் கோலமாவு கோகிலா, விசுவாசம், சிவாவுடன் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்,இந்த நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளிநாடு சென்று வருவார்கள், இந்த நிலையில் இவர் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்திலிருந்து கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி என்ற பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது.

அந்த பாடலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு ப்ரொபோஸ் செய்துள்ளார் மேலும் இந்த பாட்டுதான் இந்த சூழலுக்கு தகுதியாக உள்ளது என கூறி அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.