காசுக்காக திருப்பதி பெருமாளை தூக்கியெறிந்த விக்னேஷ் நயன்தாரா ஜோடி.. இதுல கூடவா வியாபாரம்

வருகிற ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆக உள்ள நிலையில், தற்போது இவர்களின் திருமணத்தை வியாபாரம் செய்துள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் எங்கு சென்றாலும் ஜோடியாக சென்று அவ்வபோது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவர். இதனிடையே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்ததையடுத்து சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்க விலை பேசியுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்து அது கேன்சல் ஆனது. இந்த நிலையில் நயன்தாரா ஓடிடி தளத்தில் தன் திருமண வீடியோவை விலை பேசுவதற்காகவே மகாபலிபுரத்தில் தன் திருமணத்தை மாற்றி உள்ளார் என செய்திகள் பரவலாக வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனது திருமணத்தில் கூட வியாபாரம் செய்யும் அளவிற்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இறங்கியுள்ளனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் முகம் சுளிக்கும் வகையில் பேசி வருகின்றனர். மேலும் வெங்கடாசலபதியை விட வியாபாரமே பெரியது என்று இருவரும் நினைப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் திருப்பதியில் பத்துக்கும் குறைவானவர்களே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதால் மகாபலிபுரத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் 200க்கும் மேற்பட்ட திரை பிரபலங்களை வைத்து ஹிந்து முறைப்படி இவர்களின் திருமணத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்குப்பின் படவாய்ப்புகள் அதிகமாக வராமல் போக அதிக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தினால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் நயன்தாரா, தற்போது இதுபோன்று செய்து வருகிறார் என்றும், ஒரு சில தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும் இதுவே தமிழ் சினிமாவின் ஒரு நடிகையின் திருமணத்தை முதன்முறையாக பிரபல ஓடிடி நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குவது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -