சமீபத்தில் வெளியான டோரா படம் நயன்தாராவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், தொடர் வெற்றிகளுக்கு நடுநடுவே இந்த மாதிரி ஓரிரு படங்கள் தோல்வி அடைவது என்பது சாதாரணமான ஒன்றுதான் என்பதால் எந்தவித சோர்வும் இன்று அதே எனர்ஜியுடன் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், அறம், இமைக்கா நொடிகள் படங்களில் நடித்து முடித்துவிட்ட நயன்தாரா, கொலையுதிர்காலம், வேலைக்காரன் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நயன்தாராவிடம் கதை சொல்லிவிட்டு பல டைரக்டர்கள் கால்சீட்டுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, வண்ண ஜிகினா உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமியும் நயன்தாராவிடம் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறார். அந்த படம் ஓட்டப் பந்தய வீராங்கனையை மையப்படுத்திய கதையில் உருவாகிறதாம். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு கோச்சிடம் முறையான பயிற்சி எடுத்து, ரியல் ஓட்டப்பந்தய வீராங்கனையாக தன்னை மாற்றிக்கொண்டு களம் இறங்குகிறாராம் நயன்தாரா.