Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக மூன்று வேடத்தில் நடிக்கும் நயன்தாரா.. அம்மன் அருள் கொடுத்துட்டாங்க போல!
இதுவரை முன்னணி நடிகர்கள் பலர் மூன்று வேடங்களில் நடித்த நிலையில் நயன்தாரா முதல் முறையாக ஒரு நடிகை மூன்று வேடங்களில் நடிக்க உள்ளது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமில்லாமல் நயன்தாராவின் மீது பல நடிகைகளுக்கு வயிற்று புகைச்சல் அதிகமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இளம் வயதில் என்னதான் காட்டினாலும் தங்களைக் கண்டு கொள்ளாத ரசிகர்களுக்கு மத்தியில் நயன்தாரா வயதான பிறகும் இவ்வளவு ரசிகர்கள் வைத்துள்ளது அனைவருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாம்.
சமீபகாலமாக நயன்தாரா தொடர்ந்து பல திரில்லர் படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்களை தவிர மற்ற படங்கள் அனைத்துமே படுதோல்வியை சந்தித்துள்ளது.
இருந்தாலும் தலை கீழாகத்தான் குதிப்பேன் என மீண்டும் திரில்லர் அம்சம் கொண்ட கதையில் மூன்று வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் நயன்தாரா.
சமீபத்தில் வந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

nayanthara-cinemapettai
கவர்ச்சி நடிகையாகவும் கடவுள் நடிகையாகவும் கே ஆர் விஜயா மற்றும் ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது நயன்தாராவை மட்டும் தான் என்கிறார்கள் சினிமா வாசிகள்.
