fbpx
Connect with us

Cinemapettai

நயன்தாராவே கதீன்னு கிடக்கும் விக்னேஷ் சிவன்.. ஒரு வழியா காரணத்தை கண்டு புடிச்ச நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவே கதீன்னு கிடக்கும் விக்னேஷ் சிவன்.. ஒரு வழியா காரணத்தை கண்டு புடிச்ச நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பெயருடன் கெத்தாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ‘ஐயா’ படத்தின் மூலம் சாதுவாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளுக்கு சவால்விடும் அளவுக்கு வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தல அஜித், இளையதளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு திரையரங்கில் எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்குமோ, அதே அளவிற்கு நயன்தாராவின் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பேருக்கேத்த மாதிரியே வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்குற ஒரே நடிகை நயன்தாரா தான்.

இவர் நடித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக அண்மையில் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது கொரோனா லாக் டோன் முடிந்த பின்பு திருமணத்தை வச்சுக்கலாம்னு முடிவெடுத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2019ல் நயன்தாராவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.71 கோடி என்று எல்லாரும் வாயடைத்துப் போகும் அளவுக்கு அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

இப்பதான் தெரியுது, ஒரு தனி விமானத்தையே வாடகைக்கு எடுத்துட்டு, கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் அளவுக்கு கோடீஸ்வரி தான் நயன்தாரா.

புடிச்சாலும் புளியங் கொம்பா தான் புடிச்சிருக்காரு விக்னேஷ் சிவன், நயன்தாராவே கதீன்னு கெடக்குறதுக்கு இதான் காரணமான்னு நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனையை பங்கம் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top