News | செய்திகள்
நான்காவது முறையாக ரஜினியுடன் இணையும் நயன்தாரா?
கடந்த ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிப்பார் என இந்த மலையாளம் படம் வெளியான நாளில் இருந்தே பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட ரஜினி தரப்பு இதை மறுத்து பேசியிருந்தது. ஆனால் தற்போது இப்படம் உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய சித்திக்கே தமிழிலும் இப்படத்தை இயக்குவார் என்றும் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா இதிலும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் சந்திரமுகி, சிவாஜி, குசேலன் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார் நயன்தாரா.
