மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா?

முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.

எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலிஷ் வில்லனாக இந்த படத்தில் நடிக்கின்றார், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என முருகதாஸ் எண்ணியுள்ளார்.

அவர் நினைத்தால் பாலிவுட் நடிகைகளையே நடிக்க வைக்கலாம், ஆனால், இவர் நயன்தாரா தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்துள்ளார்.

தற்போது நயன்தாராவிடம் இதில் நடிக்க பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதாம், ஏற்கனவே நயன்தாரா முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments