Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் காதலனுக்கு நன்றி! மேடையை அதிர வைத்த நயன்தாரா?
காதலிக்கறது என்னமோ எல்லாருக்கும் பொதுவானா ஒண்ணுதான் ஆனால் யார் காதலிக்கறது? யாரை காதலிக்கறது? என்பதுதான் சுவாரசியம். அதும் நடிகைகள் வாழ்கையில் நடக்கும் காதல் கொஞ்சம் வில்லங்கமா இருக்கும். ஜெமினி கணேசன் பொண்ணு ரேகா ஆரம்பத்தில் இருந்தே அமிதாப் பச்சனை காதலித்தார். ஆனால் திருமணம் செய்யவில்லை. அவரை நினைத்தே காலம் முழுக்க ஓட்டிவிட்டார். அது ஹிந்தி சினிமாவை பொறுத்த வரைக்கும் சாதாரன ஒன்றுதான் ஆனால் நம்ம தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதுசு.
நடிகைகள் என்றாலே பாட்டு, டான்ஸ் மட்டும்தான் என நினைத்து கொண்டிருக்கும் நேரத்தில் நயன்தாரா அதனை வேறு விதத்தில் மாற்றினார். நேரடியாக ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடிக்க ஆரம்பித்து பெரிய வெற்றி குடுத்தார், பட்ஜெட் டைரக்டர்களின் நடிகை ஆனார். நடிகைகளின் சூப்பர் ஸ்டார் ஆனார். என்ன ஆனாலும் அவருக்கு உணமையான ஒரு காதல் வராமலா போகும். பிரபுதேவாவிடம் ஆரம்பித்து சிம்புவிடம் தொடர்ந்து இப்போது விக்னேஷ் சிவனிடம் வந்துள்ளது நயன்தாராவின் காதல். இருக்கலாம் தவறில்லை ஒருவர் பல திருமணம்தான் பண்ண கூடாது காதல் பண்ணிக்கலாம் என்பது சில நடிகைகளின் கொள்கை. சரியான துணையை தேர்ந்தெடுக்க இதெல்லாம் தவறும் இல்லை.
நயன்தாரா எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். ஆனால் அறம் வெற்றியில் கலந்து கொண்டார். இப்பொழுது சில விருது நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். எல்லாத்துக்கும் காரணம் காதல். ஆமா போற வர இடம்லாம் விக்னேஷ் சிவன் என்னாச்சி, சிம்பு என்னாச்சினு என கேள்விகளை கேட்கும் பத்திரிகைகாரங்கதான் காரணம். இப்பொழுது அவரே ஆமா என் ஆளு விக்னேஷ் சிவன்தான் என பொது மேடையில் கூறும் அளவுக்கு போய் விட்டது. இனி மைக்க தூக்கிட்டு யாரும் கேள்வி அதே கேட்க முடியாது.
தற்பொழுது ஹிந்து பத்திரிகை நடத்திய World of Women 2018 என்ற விருது விழாவில் கலந்து கொண்டார்.சினிமாவில் சாதித்து வரும் பெண் என்ற வகையில் நயன்தாராவுக்கு விருது வழங்கினர். விருதை வாங்கி மேடையில் பேசிய நயன்தார” என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோருக்கு நன்றி, பின் என்னுடைய காதலனுக்கும் நன்றி என விருது மேடையில் கூறினார்.
#Nayanthara's award winning moments.. She says this is very different from all the film award events she has attended.. Tells that she goes back even more inspired seeing all the other women achievers around.. #TheHinduWorldOfWomen2018 pic.twitter.com/hIAbg0oLBs
— Kaushik LM (@LMKMovieManiac) March 23, 2018
Lady Superstar #Nayanthara looking drop-dead gorgeous at the #TheHinduWorldOfWomen2018 Awards. She makes her presence felt at important events such as this, without a fuss. pic.twitter.com/6vI88kLWQ0
— Sidhu (@sidhuwrites) March 23, 2018
This one at #TheHinduWorldOfWomen2018 ? pic.twitter.com/j2xUQ8pPTE
— Nayanthara✨ (@NayantharaU) March 23, 2018
#DazzlerMoments ?The Hindu Dazzler Award for showcasing excellence in the field of entertainment-Nayanthara #TheHinduWorldOfWomen2018 pic.twitter.com/aUyN2ITHBt
— Nayanthara✨ (@NayantharaU) March 23, 2018
