தற்சமயம் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ‘தனி ஓருவன்’ பாணியில் இதுவும் கமர்ஷியல் மற்றும் மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் முதல்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா இதில் நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.