படமே ஓடலைன்னாலும் பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. ஓவர் அட்டூழியம் பண்ணும் நயன்தாரா

Nayanthara
Nayanthara

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் என கெத்து காட்டும் நயன்தாரா வெற்றி படங்களை கொடுத்து நெடுங்காலம் ஆகிவிட்டது. கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த கனெக்ட், இறைவன், அன்னபூரணி போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

ஆனாலும் அம்மணிக்கு பந்தா மட்டும் குறையவில்லையாம். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் நயனின் அட்ராசிட்டியால் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறாராம். தற்போது நயன்தாரா மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கடைசி ஷெட்யூல் ஊட்டியில் நடைபெறுவதற்கு பிளான் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நயன்தாரா அந்த கிளைமேட் என்னுடைய குழந்தைகளுக்கு ஒத்துக்காது. அதனால் வர முடியாது என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.

Also read: நயன்தாரா வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்.. சுயமரியாதை காசு கொடுக்குமா, பாலிவுட் வாய்ப்பு முக்கியம் பிகிலு

வேறு வழி இல்லாமல் தயாரிப்பாளரும் சென்னையிலேயே ஊட்டி போல் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். அங்கு நயன்தாரா தன் குழந்தைகளையும் அழைத்து வருகிறாராம். அவர்களை பார்த்துக் கொள்வதற்காகவே ஐந்து பெண்கள் கூடவே வருகிறார்கள்.

அவர்களுக்கு ஒரு நாளைக்கு 20,000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். அது அனைத்தும் இப்போது தயாரிப்பாளர் தலையில் தான் விழுந்திருக்கிறது. நயன்தாராவுக்கு கொடுத்த சம்பளம் போதாது என்று இவர்களுக்கும் சேர்த்து சம்பளத்தை கொடுத்து வருகிறார் தயாரிப்பாளர்.

இதுதான் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு எந்த படமும் ஓடவில்லை. ஆனாலும் அவருடைய பந்தா மட்டும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படி ஓவர் அட்டூழியம் பண்ணும் அவர் தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்.

Also read: பிசினஸில் நயன்தாராவை மிஞ்சிய அனிருத்.. சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட தொழில்

Advertisement Amazon Prime Banner