Connect with us
Cinemapettai

Cinemapettai

அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய நயன்தாரா! அப்படி என்னதான் செய்தார்?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய நயன்தாரா! அப்படி என்னதான் செய்தார்?

தமிழ் திரையுலகின் கனவுக்கன்னியான நயன்தாரா, சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தனது பர்சனல் பிரச்சனைகளால் அதன் பிறகு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த வித பட ப்ரோமோஷன்களுக்கும் வருவதில்லை, அது பெரிய நடிகர்கள் படமாக இருந்தாலும் சரி. ஆனால் இப்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் அறம் என்னும் திரைப்படத்தின் ப்ரோமோஷன்காக பல ஆண்டுகள் கழித்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

nayanthara aramநேற்று இந்த நிகழ்ச்சி ஒரு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நயன்தாரா இந்த படத்திற்கு மட்டும் ஏன் அதிக முக்கியத்துவம் தருகிறார் என விசாரித்தபோது சில தகவல்கள் வெளியாகின.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கொண்டாடிய கோபி நயினார் என்பவர் இயக்கத்தில்தான் அறம் திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜெ. ராஜேஷ். இவர் வேறு யாருமில்லை நயன்தாராவின் மேனேஜர்.

nayantharaபடத்தில் தான் நடித்ததர்காகவோ, தனது மேனேஜர் என்பதற்காகவோ மட்டும் நயன்தாரா ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லையாம் இப்படத்தின் மறைமுகத் தயாரிப்பாளரும் நயன்தாராதான் என்று சொல்கின்றனர். அதனால்தான் இந்த அளவிற்கு இறங்கி வந்து வேலை செய்கிறார் என்று திரைப்பட வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

நயன்தாராவின் இந்த செயல் பல பெரும் தயாரிப்பாளர்களையும் ஆதங்கப்பட வைத்துள்ளது, ஏனெனில் அவர்கள் பல முறை கெஞ்சி கேட்டும் நயன்தாரா இதுவரை எந்த ப்ரோமோஷனிலும் கலந்து கொண்டதில்லை.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அறம் செய்ய விரும்பு

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top