Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புகழ் போதையில் தலைக்கணத்தில் ஆடும் நயன்தாரா, சமந்தா.. அவங்க இல்லன்னா உங்களுக்கு அடையாளமே இல்ல தெரியுமா.?

தமிழ் சினிமாவில் எப்படி நயன்தாராவோ அதேபோலதான் தெலுங்கு சினிமாவில் சமந்தா அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இவர்கள் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பு பெற்று வருகின்றன.

ஒரு காலத்தில் பட வாய்ப்புகளுக்காக ஏங்கி வந்த நடிகைகளில் இவர்களும் ஒருவர் தான். ஆனால் இவர்கள் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று சாதனை படைத்து வருவதால் நயன்தாரா மற்றும் சமந்தா தலை கணத்தில் ஆடுவதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

அதாவது படப்பிடிப்புக்கு வரும்போது நயன்தாரா மற்றும் சமந்தா தங்களுக்கு என்று 6, 7 பவுன்சர்களை அழைத்து வருவதாக கூறியுள்ளனர். படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாலும், பொது இடத்திற்கு சென்றாலும் அதிகமான ரசிகர்கள் தற்போது இவர்களை சூழ்ந்து வருவதால் அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்த மாதிரியான முயற்சி செய்து வருவதாக கூறி வருகின்றனர்.

nayanthara

nayanthara

இதனால் பாதிப்படைய போவது நயன்தாரா மற்றும் சமந்தா கிடையாது தயாரிப்பாளர்கள் தானாம். ஏனென்றால் இவர்கள் கூட்டிட்டு வரும் பவுன்சர்களுக்கு ஒரு நாளைக்கு 1.50 லட்சம் ரூபாய் தயாரிப்பாளர்கள் கொடுத்து வருவதாகவும். இதனால் இவர்களது சம்பளத்தை தாண்டியும் செலவு வருவதாக தயாரிப்பாளர்களும் கதறி வருகின்றனர்.

samantha

samantha

இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு காலத்தில்  நம்மளை கொண்டாட மாட்டார்கள் என ஏங்கி வந்த நடிகைகள். தற்போது படங்கள் வெற்றி பெற்று புகழ் போதையில் தலைக்கணத்தில் எங்களையெல்லாம் மதிப்பது கூட இல்ல என ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

மேலும் இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பேரும், புகழும் சரி ஒரு காலம் வரைக்கும் தான் இருக்கும் அதனை புரிந்து கொண்டவர்கள் யாரும் இந்த மாதிரி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்கள் என நயன்தாரா மற்றும் சமந்தாவிற்கு சமுகவலைத்தளத்தில் அறிவுரை கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top