Tamil Cinema News | சினிமா செய்திகள்
டாப் ஆங்கிளில் தாறுமாறாக ரொமான்ஸ் செய்யும் நயன், சிவன் ஜோடி.. வைரலாகும் போட்டோ!
தமிழ் சினிமாவில் பரவலாக பேசப்பட்டு வரும் காதல் ஜோடிகளில் முக்கியமானவர்கள் தான் விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி. இவர்கள் இருவரும் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து காதல் பறவைகளாக சினிமா உலகில் சுற்றித் திரிகின்றனர்.
இந்த நிலையில் நயன்தாரா தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
அதாவது விக்னேஷ் சிவனும் நயனும் தங்களுடைய காதலின் அடையாளமாக அவ்வப்போது தங்களுடைய ரொமான்டிக்கான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில், விக்னேஷ் சிவனுடன் தாறுமாறாக ரொமான்ஸ் செய்திருக்கிறார் நயன்.
மேலும் இந்த புகைப்படம் டாப் ஆங்கிளிலிருந்து மிகவும் ரம்மியமாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு காண்போர் பலரின் நெஞ்சை கவர்ந்துள்ளது.
