Nayanthara-and-Samantha
Nayanthara-and-Samantha

சக நடிகையான சமந்தாவை மாடலாக கொண்டு நடிகை நயன்தாரா ஒரு முடிவை எடுத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Samantha-
Samantha-

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வரிசையில் முக்கியமானவர் தமிழ் சினிமாவில் நயன்தாரா தான் முதலிடம். இருந்தும், பொறுமையாக இருந்து இன்று தமிழ் நாயகர்களுக்கு சமமான தரத்தை பெற்று இருக்கிறார். கடந்த வருடம், டோரா, மாயா மற்றும் அறம் ஆகிய படங்களில் நாயகி முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார்.

மூன்று படங்களுமே சொல்லிக்கொள்ள கூடிய அளவு வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, இந்த வருடமும், கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம், இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் என நாயகி முக்கியத்துவம் உள்ள படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து, இந்த வருடத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். அதிலும், அஜித்திற்கு சமமான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

சினிமா ஒரு பாதையில் சுமூகமாக செல்கிறது என்றால் காதல் வாழ்வையும் அழகாக கொண்டு சென்று கொண்டு இருக்கிறார். கோலிவுட்டின் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை லவ்வி வரும் நயன், இதுவரை அதை வெளிப்படையாக ஊடகத்தில் அறிவிக்கவில்லை. இருந்தும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்கள் இந்த ஜோடியை சீண்டும் போது வெட்க புன்னகையை மட்டுமே வீசி செல்கிறார். தங்கமே என நயனை அழைக்கும் விக்னேஷ், சில முக்கிய விழா நாட்களில் இருவரின் செல்பியை போட்டு காதல் தீயில் எண்ணெய் ஊற்றி விட்டு அமைதியாகி விடுவார். அட என்னப்பா என நினைக்க தோணுமே?! நானும் ரவுடி தான் படத்தில் தொடங்கிய இவர்கள் காதல் வருடங்களை கடந்து விட்டது.

Nayanthara
Nayanthara

இன்னும் இருவரும் திருமண பந்தத்தில் இணையவில்லை. கோலிவுட்டின் முக்கிய ஸ்டார் நாயகியாக இருக்கும் நயன்தாரா, எல்லா நடிகைகள் போல திருமணம் செய்து கொண்டால் தனது மார்க்கெட் இறங்கி விடும். பட வாய்ப்புகள் குறையும் என்பதை யோசித்தே திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார். பல வெற்றி நாயகிகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து நாயகியாக ஒதுக்கப்பட்டது இவரின் அச்சத்திற்கு மேலும் வலு சேர்த்தது.

இந்நிலையில், கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட சமந்தாவின் மார்க்கெட் கொஞ்சம் கூட அசையவில்லை. தமிழ், தெலுங்கு என தொடர்ந்து வாய்ப்புகளை குவித்து வருகிறார். தற்போது, இந்த சேதி தான் நயனுக்கு பெரும் தெம்பை தந்து இருக்கிறதாம். இதனால், தன் காதலர் விக்னேஷ் சிவனை விரைவில் கணவனாக அறிவிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.