Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா- ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் லேட்டஸ்ட் அப்டேட்.. அடியாத்தீ இம்புட்டு ஸ்பீடா
‘LKG’ படத்தை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் பாலாஜி கதை, திரைக்கதை எழுதி, இணைந்து இயக்கி, நடிக்கும் படமே மூக்குத்தி அம்மன். இப்படத்தை இவருடன் இணைந்து NJ சரவணனும் இயக்குகிறார். அம்மன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய், இப்படத்திற்க்கு க்ரிஷ் இசை.
ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், “இந்த ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 44 நாட்கள் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு நடத்தினோம். இதில் சுமார் 90% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. கடவுளுக்கும், கன்னியாகுமரி மக்களுக்கும் நன்றி. எனது குழுவினர் மற்றும் நயன்தாராவின் ஒத்துழைப்புக்கு நன்றி. கோடைக்கு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Mookuthiamman schedule 1 shoot wrap
மேலும் ஒரு வாரம் சென்னை ஸ்செடுல் மட்டும் தான் பாக்கியாம். இந்த கோடை விடுமுறையில் படம் ரிலீஸ் ஆகுமாம்.
