Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara-shahrukh-khan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு முன்னால் காதலர் செய்த சித்து வேலை.. காற்றில் பறந்த ஷாருக்கான் படவாய்ப்பு

சினிமாவில் நடிகைகளுக்கு சோதனைகள் வருவது ஒன்றும் புதிதல்ல அதில் நம்ம நயன்தாரா மட்டும் என்ன விதிவிலக்கா. நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெறுவதற்கு முன்னதாக பல அவமானங்களை சந்தித்து உள்ளார் என அவரே பலமுறை கூறி உள்ளார். அதன்பின் நடந்ததுதான் பிளாஸ்டிக் சர்ஜெரி எல்லாம்.

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு சிம்பு, பிரபுதேவா தற்போது விக்னேஷ் சிவன் என சிலர் காதல் வரிசையில் இருந்தனர். இதில் பிரபுதேவா திருமணமானவர் என்று தெரிந்தும் நயன்தாராவை மறுமணம் செய்யும் அளவிற்கு போக பின்னர் கைவிடப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ஷாருக்கான் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதுவும் அந்த படம் மிகபெரிய வெற்றி பெற்ற படம்.

வேறு ஒன்றும் இல்லை, சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், அந்த படத்தின் ஒரு பாடலுக்கு பிரபு தேவா தான் கோரியோகிராபர் என்பதால் வாய்ப்பு வேண்டாம் என்று உதறி விட்டாராம்.

ஏனென்றால் பிரபுதேவாவுடன் காதல் முறிவில் இருந்த நேரமாம், அதற்குப் பின்னர் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்த அந்த படம் வெளிவந்தது.

தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அடிக்கும் லூட்டிகளை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து தான் வருகின்றனர். நயன்தாராவை பொருத்தவரை தற்போது திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்புகள் குறையும் என்பதால் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டாராம்.

Continue Reading
To Top