Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயனிடம் கெஞ்சிய பிரபுதேவா.. விடாப்பிடியாக மறுத்த லேடி சூப்பர்ஸ்டார்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் ஒரு படத்திற்காக பெரும் போராட்டமே நடத்தி இருக்கிறார் பிரபுதேவா.
கோலிவுட்டில் பல சர்ச்சைகளை தாங்கி இன்னமும் தொடர்ந்து நட்சத்திர நாயகியாக ஜொலித்து வருபவர் நயன்தாரா. முதலில் நடிகர் சிம்புவுடன் காதல். தொடர்ந்து, இருவரும் இருக்கும் நெருக்கமான ஸ்டில்கள் வெளியாகியது. இருந்தும், இருதரப்பிடமும் எந்தவித தகவலோ, மறுப்போ வெளியிடவில்லை. ஸ்டார் ஜோடியாக இருப்பார்கள் என யோசித்து கொண்டு இருக்கும் நிலையில், இருவரும் பிரிந்ததாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இதை தொடர்ந்து, இருவருமே சினிமாவில் பெரிய ப்ரேக் எடுத்து கொண்டனர்.
பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய சிவாஜி படத்தில் ஒற்றை பாடலில் ஸ்லிம் பியூட்டியாக எண்ட்ரி தந்தார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஒட்டுக்கொண்டார். அப்போது, நயனுக்கும், நடன இயக்குனர் பிரபுதேவாவிற்கு காதல் மலர்ந்தது. இருவரும் பல இடத்தில் ஒன்றாக தோன்றினர். பிரபுவிற்கு, லதா என்ற மனைவி இருந்ததால், இந்த காதல் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து, பிரபுதேவாவிற்காக மதம் மாறினார் நயன்தாரா. ஆனால், இந்த காதலிலும் விதி விளையாடியது. 2012ல் பிரபுதேவாவை பிரிந்து விட்டதாக நயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து, இருவரும் அவரவர் துறையில் தங்கள் வேலைகளை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகராக பிஸியாக இருக்கும் பிரபுதேவா விரைவில் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது. அப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க லேடி சூப்பர்ஸ்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என தெளிவாக தெரிவித்து விட்டாராம்.
சிம்புவுடன் காதல் முறிந்த பின்னரும், அவருடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்தார். ஆனால், பிரபுதேவாவுடனான காதல், திருமணம் வரை நின்றதால் அதில் நயனுக்கு பெரிய மனவருத்தம் இன்னும் இருக்கிறதாம். இதனால், தனக்கு இந்த வாய்ப்பே வேண்டாம் என தெளிவாக சொல்லி விட்டாராம் நயன்.
