fbpx
Connect with us

கௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.?

News | செய்திகள்

கௌதமிக்கு துரோகம் செய்த நம்பர் ஒன் நடிகை.. இயக்குனர் கனவு.?

நடிகை கௌதமிக்கு நேர்ந்த துரோகம்!

தமிழ் சினிமாவில் கௌதமி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார். சினிமா உலகில் எல்லோருக்கும  இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வேண்டுமென ஆசைப்படுவது இயல்பு. அந்த ஆசை தற்போது கௌதமி அவர்களுக்கு வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

கௌதமி இயக்குனராக வேண்டும் என்ற கனவில் முன்னணி லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாராவிடம் தன் கதையை கூறியுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அந்த கதையை கேட்டு தங்களுக்கு பிடித்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் நயன்தாராவின் கால்ஷீட் இப்போதைக்கு இல்லை என்றும் இதற்கான முடிவை ஹைதராபாத்தை சேர்ந்த ராணா என்ற ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளதாக கூறியுள்ளார்.

அதனால் கௌதமியை அவர்களை நேரில் சந்திக்குமாறு நயன்தாரா கூறியுள்ளார். அதை நம்பி அந்த நிறுவனத்தை அணுகி நயன்தாராவின் கால்ஷீட் பற்றி கேட்டுள்ளார் ஆனால் அவர்கள் தங்களிடம் கதையை செல்லுமாறு கூறியுள்ளனர். அந்தக் கதையை கேட்டதும் உடனடியாக எங்களுக்கு இந்த கதை பிடிக்கவில்லை என்றும் இதனை எடுக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இதில்  முக்கியமான  விஷயம் என்னவென்றால் இந்த கதை நயன்தாராவுக்கு பிடிக்காமல் அதனை இவ்வளவு பெரிய நடிகையிடம் எப்படி கூறுவது என்று தெரியாமல் சுற்றிவளைத்து கூறியுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இது போன்ற நிகழ்வுகள் சினிமாத்துறையில் நடப்பது சகஜம்தான் இவர்கள் கூட்டணியில் மற்றொரு படம் வெளிவருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top