Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எத்தன கோடி கொடுத்தாலும் இந்தப் படத்துல நான் நடிக்க மாட்டேன்.. நயன்தாராவின் அதிரடியான முடிவு!

கோலிவுட்டில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் சினிமா துறையை கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகை தான் நயன்தாரா. இன்னமும் இவருக்கு நிகரான ஒரு ஹீரோயின் கோலிவுட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும் இவரது நடிப்பில் தற்போது வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் நயன்தாரா, எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த படத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று ஒரு படத்தை  நிராகரித்து விட்டாராம். இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் ‘அந்தாதுன்’. இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. மேலும் நயன்தாராவை ‘அந்தாதுன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்காக 4 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியும், அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

ஏனென்றால் ‘அந்தாதுன்’ படத்தின் கதைப்படி கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் கதாநாயகி வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைப்பதற்காக படக்குழுவினர் அணுகியபோது, நயன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.

nayanthara-cinemapettai

nayanthara-cinemapettai

இதற்கு காரணமாக நயன் படக்குழுவிடம், ‘நான் தெலுங்கில் சீதையா  நடிச்சிருக்கேன். இப்ப வரைக்கும் தெலுங்கு மக்கள் என்ன சீதையாவே நெனச்சு ரசிச்சுட்டு இருக்காங்க, இப்ப நான் இந்த படத்துல நடிச்சேன்னா  மக்கள் யாரும் என்னை ஏத்துக்க மாட்டாங்க’ என்று சொல்லிவிட்டாராம் நயன்தாரா.

எனவே, நயன்தாரா தன்னோட இமேஜை மெயின்டன் பண்ணுவதற்காகவும்,  ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
To Top