தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று புகழப்படும் நயன்தாரா தற்போது ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் ‘காஷ்மோரா’, ‘திருநாள்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் நயன்தாராவை வைத்து அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கும் புதிய படத்திற்கு, ‘டோரா’ என அனிருத் பெயர் சூட்டியிருக்கிறார்.

விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் சற்குணம் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் நயன்தாராவுடன் இணைந்து ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கின்றனர். மாயா போன்று இதுவும் ஒரு திகில் கதைதான் என்றாலும் காமெடிக்கும் படத்தில் குறைவிருக்காது என்று கூறுகின்றனர்.

குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பெயர் ‘டோரா’ என்பது குறிப்பிடத்தக்கது