Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதுக்கு 8 கோடி வேண்டும்.. பகீர் கிளப்பிய நயன்தாரா
ஹீரோக்களுக்கு இணையாக தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இவ்வளவு வேகம் ஆகாது நயன்தாரா மட்டும் சம்பள விஷயத்தில் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக வாங்குகிறார்.
நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடிக்கும் லவ் ஆக்ஷன் டிராமா படத்தின் கலர்புல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த படத்தில் கூட இந்த அளவு அதிகமாக சம்பளம் வாங்கவில்லை ஏன் என்றால் அதில் ஹீரோ நிவின் பாலி. தற்பொழுது அவரே ஹீரோயினாக படம் முழுவதும் வருவதால் அவர் 8 கோடி வேண்டும் என கேட்கிறார் என்று கூறுவதாக சொல்கிறார்கள்.
அவ்வப்போது நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் திருப்பதி சென்று தரிசனம் செய்து வருகிறார். வந்தபின் சினிமா வேலை சினிமாவில் 8 கோடி பின்னர் விக்னேஷ் சிவன் பயிருக்கு ஒரு சில பல கோடிகள் என கோடிகளில் நயன்தாரா வாழலாம் என திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் நயன்தாராவை வைத்து எடுத்த படங்கள் தோல்வியைத் தழுவின. அறம் படத்திற்கு பின்னர் எந்த படமும் பெரிதாக வசூல் செய்யவில்லை. அப்படியிருந்தும் நயன்தாரா 8 கோடி வேண்டும் என்று கேட்கிறார் என்றால் படத்தின் பட்ஜெட் 15 கோடிக்கு கொடுத்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம். அப்படி இல்லை என்றால் தயாரிப்பாளரின் கதி அதோகதிதான்.
