Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல இயக்குனரை ஒரு வருடமாக அலைய விட்ட நயன்தாரா.. கைகொடுத்த தனுஷ் பட நடிகை
சமீபகாலமாக நயன்தாராவின் மவுசு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு படத்துக்கு சுமார் 6 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
குறைந்த சம்பளத்திற்கு பல மலையாள நாயகிகள் வரிசைகட்டி தமிழ் சினிமாவுக்கு படையெடுத்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னமும் நயன்தாராவிடம் ஒரு சில தயாரிப்பாளர்கள் கெஞ்சிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
நயன்தாராவிடம் கமர்ஷியல் படங்கள் மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்ல செல்கின்றனர்.
ஆனால் அவர்களுடன் படம் செய்து தருகிறேன் என்று கூறிவிட்டு பின்னர் அலைய விடுவது நயன்தாராவுக்கு வாடிக்கையாகி விட்டது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
பிரபல இயக்குனர் நந்தா பெரியசாமி என்பவர் நயன்தாராவிடம் ஒரு கதையை கூறியுள்ளார். நயன்தாராவும் கதை அருமையாக உள்ளது விரைவில் நடிக்கிறேன் என ஒரு வருடமாக அலைய விட்டுள்ளார்.
இதனால் கடுப்பான நந்தா பெரியசாமி உடனடியாக ஆடுகளம் படத்தில் நடித்த நடிகை டாப்சியிடம் அந்த படத்தின் கதையை கூறி ஓகே வாங்கி விட்டாராம். அந்தக் கதைக்கு மட்டுமே ஒரு கோடி சம்பளம் கொடுத்துள்ளார்கள்.
பேன் இந்தியா படமாக உருவாகும் அந்த படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கி கொள்கிறேன் என நாகரீகமாக சொல்லிவிட்டாராம். அவரும் கதைக்கு ஒரு கோடி கிடைத்ததே என சந்தோசமாக உள்ளாராம்.
கடந்த சில வருடங்களாகவே நயன்தாராவின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.
