கே.எம். சர்ஜுன்

Sarjun Km

குறும்பட இயக்குனராக சினிமா உலகில் கால்தடம் பதித்தவர். என்னதான் இன்று உலகமயமாக்கல், பெண் சுதந்திரம் என்று பேசினாலும் பெண்கள் இன்றளவும் தங்கள் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும், பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் உள்ளிட்டவற்றை அருமையாக சொல்லியது குறும்படம் லட்சுமி.

lakshmi

அடுத்ததாக பள்ளிப்பருவத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது பாலினக்கவற்சியினால் கர்ப்பமாகும் தன் மகளை, எப்படி ஒரு தாய்
புரிந்து கொண்டு அவளை தேற்றி மனதளவில் அந்த குழந்தையை திடப்படுத்தி, அவள் மீது நம்பிக்கை வைத்து அவளை மீண்டும் வாழ்வில் சுதந்திரமாக நடக்கும் தைரியத்தை கொடுக்கும் குறும்படம் தான் மா.

maa short film

இவ்விரண்டு படங்களுமே பல்வேறு தரப்பினர்களிடமும், இயக்குநர்களிடமும் பெரும் பாராட்டுகளை பெற்றது. இது மட்டும் அல்லாது இயக்குனர் சர்ஜுன் இயக்கி வெளியாகாமல் இருக்கும் படம் தான் ” எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் பகுதி”.

சத்யராஜ் வரலக்ஷ்மி சரத்குமார் இப்படத்தில் நடித்துள்ளனர். கிஷோர் மற்றும் விவேக் வில்லனாக நடித்துள்ளனர்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா

ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளுக்கு முக்கிய துவம் கொடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. ஒருபுறம் இவர் அஜித்தின் விசுவாசம் படத்தில் நடிப்பது வைரல் நியூஸ் என்றால் மறுபுறம் இவர் சர்ஜுன் இயக்கத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

NAYANTHARA

அறம், குலேபகாவலி திரைப்படங்களை தயாரித்த கே.ஜெ.ஆர் நிறுவனம்
இப்படத்தை தயாரிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும்.

Sarjun – ARMurugadoss

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

sarjun with manirathinam

இயக்குனர் சார்ஜுன் வெறும் குறும்படங்கள் மட்டும் இயக்கியவர் அல்ல. இவர் மணிரத்தினம் மற்றும் முருகதாஸிடம் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்