Connect with us
boomerang-movie

நயன்தாராவின் புதிய அடையாளம்… ரவுடி புரடக்‌ஷன்ஸ்?

News | செய்திகள்

நயன்தாராவின் புதிய அடையாளம்… ரவுடி புரடக்‌ஷன்ஸ்?

நயன்தாராவின் புதிய அடையாளம்… ரவுடி புரடக்‌ஷன்ஸ்?

கோலிவுட் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், அவ்வப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ரோலை செலெக்ட் பண்ணி நடிக்கத் தவறுவதில்லை. அப்படி அவர் தேர்ந்தெடுத்த மாயா மற்றும் அறம் படங்கள் வேற லெவல் ஹிட்டடித்தன. அதுபோல், இந்த படங்கள் மூலம் அறிமுக இயக்குநர்களுக்கும் நயன்தாரா வாய்ப்புக் கொடுத்தார்.

vijay awards2018

vijay awards2018

அந்தவகையில், நயன் அடுத்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கும் படம் கோலமாவு கோகிலா. முழுக்க முழுக்க ஹீரோயினை மையமாகவே வைத்து நகரும் கதையம்சம் கொண்ட இந்த படத்ட்தை நெல்சன் திலீப்குமார் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். படத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசையில் எதுவரையோ, எதுவரையோ என்ற தலைப்பில் வெளியான சிங்கிள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதுவும் குறிப்பாக பாடலின் ஊடே வரும் இயக்குநர் கௌதம் மேனனின் கவர்ந்திருக்கும் குரல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்த பாடலுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஹீரோயினுக்கு உத்வேகம் ஊட்டும் வகையில் அமைந்த அந்த வரிகள், பெண்களுக்கான உந்துதலாகவே பார்க்கப்படுகின்றன.

விறுவிறுப்பாக நடந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது. நயன்தாரா டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தராவுக்கு ஜோடி கிடையாது. ஆனால், அவரது தெருவில் வசிக்கும் யோகிபாபு, அவரை ஒருதலையாகக் காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நயனிடம், யோகிபாபு புரபோஸ் பண்ணுவது போன்ற கல்யாண வயசு பாடல் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான அந்த பாடலைத்தான் பலரும் தற்போது முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக புதுமுக இயக்குநர் சர்ஜூன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கி பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.
இந்தநிலையில், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் முடிவில் நயன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara

Nayanthara

நடிகர் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படம் நயன் புரடக்‌ஷன்ஸின் முதல் படமாக இருக்கும் என்கிறார்கள். அதேபோல், தனது புரடக்‌ஷன் கம்பெனிக்கு ரவுடி புரடக்‌ஷன்ஸ் என்று பெயர் வைக்கும் முடிவில் இருக்கிறார் நயன் என கிசுகிசுக்கப்படுகிறது. தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்த நானும் ரவுடிதான் பட டைட்டில் செண்டிமெண்டில் நயன் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. வெல்லட்டும் ரவுடி புரடக்‌ஷன்ஸ்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top