திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

மரங்களை வெட்டிக்குவித்த படக்குழுவினர்.. நயன்தாரா படம் அவ்வளவு தான்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ சீரிஸ் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். பொதுவாக படங்களில் மட்டும் கோர்வையாக வசனம் பேசும், நடிகர்கள் நிஜத்தில் அதற்க்கு தலைகீழாக தான் இருப்பார்கள் என்று தெரியும்.

O2 படத்தில், மரங்களின் முக்கியத்துவம் என்ன, மரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பாடம் எடுத்த நயன்தாரா, இந்த விஷயத்தை எல்லாம் எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார் என்று தெரியவில்லை. டாக்ஸிக் என்று படத்துக்கு மட்டும் பெயரில்லை.. அந்த படத்தின் மொத்த டீமும் டாக்ஸிக் ஆக தான் உள்ளது. ஒரு படம் எடுக்க காடையே அழைத்திருக்கிறார்கள் இந்த படக்குழுவினர்..

மரங்களை வெட்டி குவித்த படக்குழு

கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் டாக்ஸிக் படத்திற்கான பூஜையை சமீபத்தில் தான் போட்டார்கள்.
ஆனால் பூஜை போட்ட கையோடு. ரம்பத்தையும் கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில், பெங்களூருவின் பீன்யா – ஜலஹள்ளி வனப்பகுதியில் பிரமாண்ட செட் அமைப்பதற்காக நூற்றுக்கணக்கான மரங்களை படக்குழுவினர் வெட்டி சாய்த்துள்ளனர்.

இது தொடர்பாக சுற்றுவட்டார மக்களால் புகார் அளிக்க பட்டதை தொடர்ந்து, கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு, முறையாக அனுமதி பெறாமல், காட்டில் உள்ள மரங்களை இவர்கள் வெட்டியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மரங்களை வெட்ட அனுமதியளித்தவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தக்க தண்டனை வழங்கவேண்டும் என்பது, அங்கு உள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இவர்களுக்கு என்ன இந்த அறிவு கூட இல்லையா என்று தான் கேட்க தோன்றுகிறது.

தெருவில் இருந்த மரத்தை வெட்டினாலே பிரச்சனையாகும். மேலும் மக்கள் எல்லோருக்கும் தெரிந்துவிடும். காட்டில் இருக்கும் மரத்தை வெட்டினால் அது பிரச்சனையாகும் என்று கூடவா ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியாது. முக்கியமாக oxygen தேவை பற்றி பாடம் எடுத்த நயன்தாரா இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

Trending News