சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வாய்ப்பு கொடுத்து மாட்டிக்கொண்ட அஜித்.. கோல்மால் செய்யும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி நிறைய நாள் காதலித்து நிறைய வருடம் கழித்து கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமும் பிரமாண்டமாக யாரும் செய்யாத முறையில் தமிழ்நாட்டில் செய்து முடித்தனர். பல எதிர்ப்புகள், விமர்சனங்கள் தாண்டி இந்த திருமணம் முடிந்து ஹனிமூன் வெற்றிகரமாக முடித்தனர். ஆனால் இவர்களைப் பற்றி சில விமர்சனங்கள் புதிதாக வந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஜோடி பணத்திற்காக பல விஷயங்கள் செய்து அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக திருமணம் நிகழ்ச்சியை ஒரு பைசா செலவில்லாமல் செய்து அதில் 25 கோடி வருமானம் ஈட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் பேசி திருமணத்தை நடத்தி முடித்தனர். இவர்கள் கெட்ட நேரம் இவர்கள் திருமணம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

அதனால் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உங்கள் திருமண வீடியோ ஓசியில் கொடுத்தால் கூட எங்களுக்கு வேண்டாம் என்று சென்று விட்டனர். நயன் ஜோடி போட்ட பிளான் எல்லாம் எதுவும் நடக்கவில்லை. அடுத்து அஜித் படத்திற்கு லைகா நிறுவனத்திடம் நயன்தாரா கஷ்டப்பட்டு பேசி விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். பின்பு நயன்தாராவின் சம்பளம் 10 கோடி என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.

பின்பு விக்னேஷ் சிவனுக்கு 20 கோடி கேட்டார் கிடைக்கவில்லை கடைசியில் 10 கோடியில் சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. எதற்காக இப்படி செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது N-75 திரைப்படம் நயன்தாராவின் 75ஆவது திரைப்படம் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று. சங்கரின் உதவியாளரிடம் கதை கேட்டு பிடித்துப்போக படம் உறுதியானது படத்தின் பெயர் அன்னபூரணி என்று பேசப்படுகிறது.

இந்த படத்தின் கதை சாதாரணமாக சமையல் செய்து மிகப்பெரிய ஓட்டல் நடத்தி சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது தான் கதை. இதேபோல் AK-62 விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தின் கதையும் சாதாரண ஒரு மனிதன் சிறு ஹோட்டல் தொடங்கி மிகப்பெரிய ஹோட்டலை நடத்தி சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது போல் கதை அமைத்து இருந்தார்.

நயன்தாராவின் 75வது படத்தின் இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணாவின் கதையை, விக்னேஷ் சிவன் எப்படி அஜித்திடம் அதே கதையை கூறுவார், ஆகையால் ஏதோ ஒரு கோல்மால் நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இப்படி பணத்திற்காக பல விஷயங்கள் செய்யும் வேலைகளை கோலிவுட் வட்டாரம் சிரித்துக்கொண்டு கவனித்து வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News